செய்திகள்

‘யாழ். போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180 ற்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மூன்று தடவைக்கு மேல் வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருகின்றன என்றும் இந்நிலையில் தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதன் காரணமாக வைத்தியசாலை விடுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
-(3)