செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு ஒன்பது புதிய வைத்தியர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு ஒன்பது வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் 35 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இதுவரை காலமும் 15 வைத்தியர்களுடன் மாத்திரமே இயங்கி வந்தது.இந்த நிலையில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய வைத்தியர்களையும் இணைத்து 24 வைத்தியர்களுடன் இயங்கவுள்ளது.

இதுவரை காலமும் இரவு 8.30 மணி வரை இயங்கிய வெளிநோயாளர் பிரிவு இரவு 10 மணி வரை சேவையினை நோயாளர்கள் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையினை வெளிநோயாளர் பிரிவு ஊடாக வழங்க முடியுமெனவும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-

Jaffna Hospital (2)