செய்திகள்

யாழ்.மயிலங்காட்டில் சட்ட விரோத மின்சாரம் பெற்ற இருவர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும்,பொலிஸாரும் இணைந்து இப் பகுதியில் மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த இருவரும் வசமாக மாட்டிக் கொண்டனர்.

குறித்த நடவடிக்கையில் மின்மானியைத் தலைகீழாக வைத்து மின்சாரம் பெற்ற ஒருவரும் பிரதான வடத்திலிருந்து மேலதிக வயரை இணைத்து மின்சாரம் பெற்ற ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.