செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சிக் கற்கை நெறிகள்

யாழ்.மாவட்டத்தில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் எட்டுப் பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படும் தமிழ்மொழி மூல தொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளுக்கு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யூலை மாதம் தொடக்கம் இவர்கள் தையல்,கணனி, வன்பொருள் திருத்துநர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்,கணனி பவட வடிவமைப்பாளர்,அழகுக் கலை வல்லுநர் ஆகிய தொழில் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

குறித்த கற்கை நெறிகளைக் கற்க விரும்புபவர்கள் இல-12,வீரசிங்கம் மண்டபம்(முதலாம் மாடி),கே.கே.எஸ்.வீதி,யாழ்ப்பாணம் எனும் முகவரியில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-