செய்திகள்

யாழ் மாவட்டம் மற்றும் கொழும்பு, கம்பாஹா, புத்தளம், கண்டி, களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துதல், ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களை தீர்மானித்தல் தொடர்பான விடயங்களை அரசாங்கத்தின் உயர்மட்டமே தீர்மானிக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் கொழும்பு, கம்பாஹா, புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.(15)