செய்திகள்

யாழ்.மாவட்ட 2015 ஆம் ஆண்டு கலை இலக்கியப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

யாழ்.மாவட்ட 2015 ஆம் ஆண்டுக்கான கலை இலக்கியப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப் போட்டி மாணவர்களுக்கான போட்டிகள்,திறந்த வயதுப் பிரிவுப் போட்டிகள் என இரு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன.

மாணவர்களுக்கான போட்டிகளில் பாலர் பிரிவில் 6 வயது முதல் 10 வயதுக்குட்பட்டோருக்கான பாடல் மற்றும் கவிதைப் போட்டிகளும் ,கனிஷட பிரிவில் 11 முதல் 15வயது வரையான மாணவர்களுக்கான கட்டுரை,கவிதை எழுதுதல் பாடல் போட்டிகளும்,சிரேஷ்ட பிரிவில் 16 வயது தொடக்கம் 19 வயது வரையான மாணவர்களுக்கு கட்டுரை,கவிதை எழுதுதல்,பாடல் நயத்தல் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

திறந்த வயதுப் பிரிவுப் போட்டிகளில் 19 வயதுக்கு மேற்பட்டோர் பங்குபெற முடியும்.இந்தப் பிரிவினருக்கான பாடல் ஆக்கம்,இலக்கிய விவரணம்,சிறுகதை,கவிதை,சிறுவர் கதை ஆக்கம்,இலக்கிய விவரணம்,நாட்டார் கலை ஆகிய போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

பிரதேச செயலக ரீதியாகப் போட்டிகள் நடாத்தப்பட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள்,பரிசில்கள் பிரதேச செயலக மாவட்ட nhசயலக மட்டத்தில் இடம்பெறும் கலை இலக்கிய விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளன.போட்டிகளுக்கான விண்ணப்பங்களைப் பிரதேசசெயலகக் கலாசார உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
யாழ்.நகர் நிருபர்-