செய்திகள்

யுத்தகாலத்து கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை முன்னால் கடற்படை த்தளபதி மறுக்கிறார்

யுத்தகாலத்தில் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை , தெஹிவளை போன்ற பல பிரதேசங்களில் மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கும் கடற்படை க்கும் தொடர்பில்லை எனவும், தனது மெய்பாதுகாவலருக்கும் தொடர்பில்லை என முன்னால் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் கடத்தப்பட்ட மூன்று மாணவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவின் நீதவான் விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் நடந்தது. அதில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் நீதவான் நேரடி விசாரணை நடாத்தினார்.

யுத்தகாலத்தில் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை , தெஹிவளை போன்ற பல பிரதேசங்களில் மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம்பெரப்பட்டுள்ளது.  கடற்படை க்கும் இதில்  தொடர்பிருந்துள்ளது.

கடத்தப்பட்ட மாணவர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்கே கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக அக்கால கடற்படை தலபதியிடம் விசாரிக்கவேண்டும் என குற்றபுலனாய்வு பிரிவின் தலைவர் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னால் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கடத்தலில் கடற்படை மட்டுமின்றி ராணுவம் போன்ற படைகளும் ஈடுபடவில்லை.

கடத்தப்பட்ட மாணவர்கள் பலரை நாம் பெற்றோருக்கு தேடி கண்டுபிடித்து கொடுத்துள்ளோம் என்று தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து பேசினார்.