செய்திகள்

யுத்தத்தின் போது நடந்த எல்லாம் மனித உரிமை மீறல் அல்ல : அரசாங்கத்தின் நிலைப்பாடு

யுத்த காலத்தில் நடந்த எல்லா சம்பவங்களையும் மனித உரிமைகள் மீறலாக பார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆனாலும் யுத்த காலத்தில் நடந்த கொலைகள் , காணமல் போகச் செய்தல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக சரியாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தென்னமெரிக்காகவிலுள்ள மனித உரிமைகள் குழுக்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்று கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)