செய்திகள்

யுவராஜ்சிங் மீண்டு வருவார்: கங்குலி நம்பிக்கை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விலைக்கு ஏலம் போனவர் யுவராஜ்சிங். அவரை ரூ.16 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. ஆனால் அவர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை.

அவரது அணியான டெல்லிக்கு தற்போது பிளே–ஆப் சுற்று வாய்ப்பு மங்கிவிட்டது. இந்த நிலையில் யுவராஜ்சிங் மீண்டு வருவார் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:–

யுவராஜ்சிங் கடந்த காலங்களில் விளையாடியது போன்ற நிலையான ஆட்டம் அவரிடம் இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தை அவர் வெளிபடுத்தினார். இதுபோன்ற ஆட்டத்தை மேலும் அவர் ஆட வேண்டும். அவர் விரைவில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று நம்புகிறேன்.

விராட் கோலியின் குணாதிசயம் பற்றி பேசுகிறார்கள். அவர் அற்புதமான வீரர் ரன்களை குவித்து வருகிறார். அவர் இளம்வீரர். இன்னும் பல விஷயங்களை கற்பார். அதன்பின் தன்னை மெருகேற்றி கொள்வார். அவரது தலைமையில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.