செய்திகள்

யேமனிலிருந்து இலங்கையரை அழைத்து வரும் முயற்சி தோல்வியில்

யேமனிலிருந்து 58 இலங்கையரை நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடரும் மோதல்நிலைமை காரணமாக அவர்களை நேற்றைய தினம் அழைத்து வர முடியாது போனதாக வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
யேமனில் பணியாற்றும் இலங்கையரில் 58 பேரை அந்நாட்டின் சனாப் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்திலிருந்து நேற்று சீன விமானமொன்றின் மூலம்; பஹ்ரைன் வரை அழைத்து வந்து பின்னர் அங்கிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருதற்கான திட்டங்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேற்கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் யேமனில் மோதல் நிலைமை தீவிரமடைந்திருப்பதால் குறித்த விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் அவர்களை கூடிய சீக்கிரத்தில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அருகிலுள்ள பாதுகாப்பான நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கையெடுத்துள்தாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.