செய்திகள்

யேமனிலிருந்து மேலும் 16 பேர் இலங்கை திரும்பினர்

யேமனில் தங்கியிருந்த மேலும் 16 இலங்கையர்கள் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர்.
சீன கப்பலொன்றின் உதவியுடன் யேமனிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த திங்கட் கிழமை ஜிபூட்டி நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்த இலங்கையர்களில் ஒரு பகுதியினரே நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
கட்;டார் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் இவர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
யேமனில் தொடரும் மோதல் நிலைமை காரணமாக அங்கு பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபடும் அரசாங்கம் கடந்த புதன் கிழமை 29 பேரை நாட்டுக்கு அழைத்து வந்திருந்தமை குறிப்பித்தக்கது.