செய்திகள்

யேமனில் சவுதி கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

யேமனில் ஹெளத்தி போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுள்ள சவுதிஅரேபியா கிளஸ்டர்குண்டுகளை( கொத்துக்குண்டுகளை) பயன்படுத்தி வருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஹெளத்தி போராளிகளுக்கு எதிராக இரண்டு தடவைகள் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம்,எனினும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
யேமனின் அல்சவ்ரா பிராந்தியத்திலுள்ள அல்அமர் என்ற பகுதியில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகம் கிளஸ்டர் குண்டுசிதறல்களின் படத்தையும் வெளியிட்டுள்ளது.படத்தில் காணப்பட்டுள்ள குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சவுதிஅரேபியாவிடம் வழங்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொத்துக்குண்டுகள் போன்றவை பரசூட் மூலமாக கீழிறக்கப்படும் வீடீயோ ஓன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவும் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சவுதிஅரேபிய தலைமையிலான நாடுகள் பலவும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதை தடைசெய்யும் பிரகடனத்தில் கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது.