செய்திகள்

ரக்ரரை பழுதுபார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் மாமன் பலி மருமகன் வைத்தியசாலையில்

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உழவு வேலைக்காக உழவியந்திரத்தை செப்பனிட்டுக்கொண்டிருந்தவேளை தவறுதலாக உழவியந்திரம் இயங்கியமையினால் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில்வ வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்று காலை உழவு வேலைக்காக உழவியந்திரத்தில் கலப்பையை சரிசெய்துகொண்டிருந்தவேளை உழவியந்திரம் திடீரென முன்னோக்கி செல்லத்தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக உழவியந்திரத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த உழவியந்திரத்தின் உரிமையாளரின் மாமனாரான பொன்னம்பலம் (வயது 80) மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இதன்போது உழவியந்திரத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட உழவியந்திரத்தின் உரிமையளரான சி. செல்வரட்ணம் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.