செய்திகள்

ரஜினி பட தலைப்பு வைக்க தயங்கும் விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கியது.

அந்தப் படத்துக்கு ஒரு தலைப்பும் கிடைத்துவிட்டது. ஆனால் வைக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் விஜய் உள்ளார்.

விஜய் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார். இதுவும் போலீஸ் கதை என்கிறார்கள். மூன்று முகம் என பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பது விஜய் மற்றும் படக்குழுவினர் கருத்து.

ஏற்கனவே ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் மூன்று முகம். படத்தைத் தயாரித்தவர்கள் சத்யா மூவீஸ் நிறுவனத்தினர்.

மூன்று முகம் தலைப்பின் அனுமதியை சத்யா மூவீஸிடம் கேட்க, அவர்கள் ரஜினிக்கு சம்மதமென்றால் நாங்கள் தருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். அதனால் ரஜினியிடம் சம்மதம் வாங்க முயற்சி நடக்கிறது.

ஆனால் ரஜினி சம்மதித்தாலும்; அவரது ரசிகர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டுமே என்பதால் மூன்று முகம் தலைப்பை வைப்பதற்கு தயங்கி வருகின்றார் விஜய்.