செய்திகள்

ரணிலின் கருத்திற்கு விக்கினேஸ்வரன் கடும் கண்டனம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாணமுதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும்,வங்காளவிரிகுடாவிற்கோ அல்லது அராபிய கடலிற்கோ அனுப்பவேண்டும் என கருதுகின்றனர்.
பாக்கு நீரினை முகாமைத்துவ குழுவான்றை அமைப்பதே அப்பகுதியில் டிரோலர்களை கட்டுப்படுத்துவதற்hகன ஓரு வழியாகும்.அந்த குழுவினர் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாததையும்,அவர்கள் ஆழ்கடலிற்குள் செல்வதையும் உறுதிப்படுத்தவேண்டும் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.