செய்திகள்

ராஜபக்ஷக்களுக்காக மக்களை மறந்தவர்கள் இன்று பாராளுமன்ற தரை விரிப்பில் : பிரதமர் ரணில்

ராஜபக்ஷக்கள் மூலம் வானத்தில் பறந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தின் தரை விரிப்பில் விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை மறந்து தேவையில்லாத விடயங்களுக்கு உதவியவர்களுக்க இது சிறந்த பாடமே எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ராஜபக்ஷக்கள் மூலம் மேலே பறந்துக்கொண்டிருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தின் தரை விரிப்பில் விழுந்து கிடக்கின்றனர். ஒரு நாள் இரவு முழுவதும் கால் மிதிக்கும்  தரை விரிப்பில் படுத்து உறங்கியுள்ளனர். இது அவர்களுக்கு நல்ல பாடம் வேண்டுமென்றால் மீண்டும் அவ்வாறு படுத்து உறங்க இடமளிக்கலாம். என நகைச்சுவையாக பிரதமர் கூறியுள்ளார்.