செய்திகள்

ராஜபக்ஷ குடும்பத்தை பழிவாங்கத் துடிக்கும் மைத்திரியின் கூட்டணியில் போட்டியிட மாட்டேன்; பசில்

ராஜபக்ஷவினரை மிகவும் வன்மமான முறையில் பழிவாங்கிவரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தனித்து வேறு கட்சி ஒன்றின் ஊடாக போட்டியிட தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.