செய்திகள்

ராஜபக்ஸவுக்கு நெருக்கமானவர்கள் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவதில் காரணம் உண்டு: ரஜீவ வியஜசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆட்சிக்கு நெருக்கமான சில சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு காரணம் இருக்கிறது என்று ராஜபக்ஸவின் முன்ணாள் ஆலோசகரும் அவரது அரசில் அமைச்சராகவும் இருந்து தற்போது புதிய அரசில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பேராசிரியர் ரஜீவ வியஜசிங்க தெரிவித்திருக்கிறார்.

தமிழ் அகதிகள் அதிக அளவில் படகுகளில் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேறுவதற்கு ராஜபக்ஸவுக்கு நெருக்கமான ஒருவர் இருப்பதாக அவுஸ்திரேலிய உளவு அமைப்பு அதிகாரிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ரஜீவ வியஜசிங்க இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

‘த அவுஸ்திரேலியன்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு  தெரிவித்த ரஜீவ வியஜசிங்க, கடந்த தேர்தலில் ராஜபக்ஸ தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் செய்த ஊழல்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதகவும் அவர் கூறினார்.