செய்திகள்

ராஜபக்ஸவை பிரதமர் ஆக்குங்கள் என்று மைத்திரியிடம் விமல் வேண்டுகோள்

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக்குங்கள், ஜனாதிபதி  மைத்திரி அவர்களே இது உங்களுடைய அரசாங்கம் இல்லை.இது ரணிலினுடைய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த ராஜபகசவை பிரதமராக்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று நுகேகொடவில் மகிந்தவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர காட்சியின் வேட்பாளரே மஹிந்த, அவர் இல்லாமல் மக்கள் வேதனையுடன் இருக்கின்றனர். அழுது புலம்புகின்றனர். இது மைத்திரி ஆட்சி அல்ல ரணிலின் ஆட்சி. இதிலிருந்து விடுபட மகிந்தவை பிரதமராக்கி நீங்களே ஜனாதிபதியாக ஆட்சியில் இருங்கள் என விமல் வீரவன்ச மைத்திரிக்கு ஆலாசனை ஒன்றையும் கூறினார்.