செய்திகள்

ராஜிதவின் மகன் மஹிந்தவுக்கு சவால்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முடிந்தால் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு காட்டுமாறு அமைச்சர் ராஜித சேனாரட்வின் மகன் சதுர சேனாரட்னவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால்  விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
நீங்கள் 1977 இல் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வந்தவரென்றால் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டு காட்டுங்கள். நானும் அந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். நீங்கள் அந்த தொகுதியில் அரசியலை ஆரம்பித்ததை போன்று அங்கேயே அரசியலையும் முடித்துக்கொள்ளுங்கள். என அவர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.