செய்திகள்

ராஜிதவும் ,விதுரவும் ஏட்டிக்கு போட்டியாக திறந்து வைத்த ஒரே கட்டிடம்

களுத்துறை இங்கிரிய பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்திய அதிகாரி அலுவலகம் நேற்று இரண்டு தடவை வெவ்வேறு நபர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரட்னவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் திறந்து வைக்கப்படவிருந்த குறித்த அலுவலத்திற்கு வந்த பாராளமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க உள்ளிட்ட குழுவினர் அங்கு விளக்கேற்றி அதனை திறந்து வைத்து விதுர விக்கிரமநாயக்கவின் பெயர் அடங்கிய நினைவுப் பலகையொன்றையும் வைத்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற அமைச்சர் ராஜித சேனாரட்ன மீண்டும் அதனை திறந்து வைத்துள்ளார்.