செய்திகள்

ரிஷாட்டின் சகோதரரை மீண்டும் கைது செய்யுமாறு ஆளும் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை நடத்தி அவரை மீண்டும் கைது செய்ய நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன், 5 மாதங்களின் பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
இவர் விடுதலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையிலேயே ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இந்தக் கடிதத்தை சமர்பித்துள்ளனர். -(3)