செய்திகள்

ருவிட்டரில் இணைந்த ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரபல சமூக வலைதளமான ருவிட்டரில் இணைந்துள்ளார்.

பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இதுவரை அதுபோன்று எந்த சமூக வலைதளங்களிலும் இணையாமல் இருந்தது விமர்சனங்களை கிளப்பி இருந்தது.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தியும் ருவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார். ‘OfficeOfRG’ என்ற பெயரில் அவரது ருவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 31, 000 க்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ ருவிட்டர் தளம் இது என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ராகுல் காந்தி, 57 நாட்கள் ரகசியமாக வெளிநாட்டில் தங்கி இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.