செய்திகள்

ரொகிங்யா அகதிகள் மீது மியன்மார் படையினர் துப்பாக்கி பிரயோகம் – படகு நீரில் மூழ்கி 20 பேர் பலி

மியன்மாரிலிருந்து தப்பிவெளியேறிக்கொண்டிருக்கும் ரொகிங்யா இனத்தவர்களின் படகு ஓன்று கவிழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள பங்களாதேஸ் அதிகாரிகள் 20 ற்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
11 குழந்தைகளினதும் 9 பெண்களினதும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் அதிகாரிகள் நவ் ஆற்று பகுதியில் அவர்களது படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்
மியனமார் எல்லைக்காவல் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்