செய்திகள்

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள்)

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் 1974 ஆம் ஆண்டு கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட கோவில் காணியை (டீ காடன்) என்ற நிறுவனத்தின் அதிகாரி தன்வசப்படுத்தி பராமரித்து கொண்டு வருவதாகவும் அதனால் அந்த காணியை அவரிடம் இருந்து கோவிலுக்காக பெற்று தரும்படி குறித்த கோவில் ஆலய பரிபாலன சபையினர்கள், தோட்ட பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இணைந்து 24.05.2015 அன்று காலை 10.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து எந்த பயனும் இல்லை எனவும், டீ காடன் நிறுவனத்தின் அதிகாரி அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி  கோவில் காணியை பராமரித்து வருவதாகவும் அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் ஆகியோர் முன்வந்து மேற்படி காணியை பெற்றுந்தரும்படியும், காணியை வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கபோவதாகும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஈடுப்பட்டடிருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் வட்டவளை பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=meecQ12ORP4&feature=youtu.be” width=”500″ height=”300″]

Protest (1) Protest (3) Protest (4) Protest (5)