செய்திகள்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடினர்.

23.3 ஓவர்களில் ஷிகர் தவான் 74 ரன்களும், விஜய் 33 ரன்களும் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியபோது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த தவான் 101 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது அவருக்கு 3-வது சதமாகும். அதேசமயம் முரளி விஜய், 98 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 150 ரன்களுடனும், விஜய் 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.