செய்திகள்

வசந்த காலங்களில் பயன்படுத்தி வந்த குதிரை ஒன்று டிப்பரில் மோதுண்டு பலி (படங்கள்)

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா நகர பகுதியில் வெளிநாட்டு உள்நாட்டு உல்லாச பயணிகளுக்கு மற்றும் வசந்த காலங்களில் பயன்படுத்தி வந்த குதிரை ஒன்று டிப்பர் ரக வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளது.

இவ்விபத்து 22.05.2015 அன்று காலை 5 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா நகரப்பகுதியில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனத்திலேயே இவ்வாறு மோதுண்டு உயிரிழந்துள்ளது.

வாகனத்தின் வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே திடீரென எதிரே வந்த குதிரையை சாரதி இவ்வாறு மோதியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தின் போது வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Horse Accident (1)

Horse Accident (2)

Horse Accident (3)

Horse Accident (4)

Horse Accident (5)

Horse Accident (6)