செய்திகள்

வடக்கின் புதிய ஆளுநர் நாளை பொறுப்பேற்பார்: முதலமைச்சருடனும் விரிவான பேச்சு

வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட பாலிஹக்கார நாளை திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக தமது பணியகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நேற்றைய தினம் அவர் யாழ்ப்பாணம் சென்றடைந்திருக்கின்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், ஆளுனர் பாலிஹக்கார சந்தித்து, அரசாங்கத்துக்கும், வடக்கு மாகாணசபைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தி ஒத்துழைத்துச் செயற்படுவது குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அதேவேளை, வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார நேற்று யாழ்ப்பாணத்துக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, போருக்குப் பிந்திய வடக்கின் பாதுகாப்புச் சூழல் குறித்து, அவருக்கு இராணுவ அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.