செய்திகள்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றமாட்டேன்: மைத்திரி

தனது தலைமையின் கீழ் எதிர்வரும் சனிக்கிழமை அமையவிருக்கும் நிர்வாகம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றாது என்று பொதுக் கூட்டணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தனது நிர்வாகம் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க மாட்டாது என்றும் தமது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். இந்த மறுசீரமைப்புக்களுக்கு தமிழ் தேசிய கூட்டணியும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது ஆட்சியில் புலிகள் மீண்டும் தலை தூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவளை ஏனைய மதங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். நாட்டைப் பிரிப்பதற்கு கூட்டமைப்புடனோ அன்றி முஸ்லிம் காங்கிரசுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை என்றும் சிறிசேன குறிப்பிட்டார்.