செய்திகள்

வடக்கிலுள்ள இராணுவ ஹோட்டல்களை அகற்றுவதற்கு அரசாங்கம் மறுப்பு!

வடக்கிலுள்ள இராணுவ ஹோட்டல்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வடக்கில் இராணுவத்திற்கு சொந்தமான 18 ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்த ஹோட்டல்களை அகற்றுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்த ஹோட்டல்களை உடைத்துவிட்டு அந்த இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியதாக சிங்களப் பத்தரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஹோட்டல்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.