செய்திகள்

வடக்கில் பெண்கள் விடுதலைப்புலிகள் காலத்திலேயே பாதுகாப்பாக இருந்தனர்

வடக்கிலுள்ள பெண்கள் விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலேயே பாதுகாப்பாக இருந்தனர். நள்ளிரவில்கூட தனியே பெண்கள் நடமாடக்கூடிய சுதந்திரம்,பாதுகாப்பு,கட்டுப்பாடு இருந்தது.

ஆனால் இன்று அவ்வாறில்லை பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாதுகாப்புக்காக இருக்கும் பொலிசாரிடம் அதிகாரம் இல்லை. சிலவேளை படையே பயிரை மேய்கிறது.

எனவே பாதுகாப்புக்கான பொலிஸ் அதிகாரம் வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி விவாதமொன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.