செய்திகள்

வடக்குக் கடலில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா வடக்குக் கடல் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், தொண்டமானாறு முதல் மாமுனை கடல் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது அந்தப் படகில் இருந்து 109 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் படகில் இருந்த பருத்தித்துறையை சேர்ந்த இருவரை கைது செய்துள்ள கடற்படையினர் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-(3)