செய்திகள்

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக பேரூந்துகள் இறக்கி விடப்பட்டன

வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், வடக்குக் கடலில் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில், பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டமே இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு,

பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேருந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது தொகுதி பேருந்துகளை ஏற்றிய சாயுரு எனும் கடற்படைக் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுளில் மேற்கொள்ளப்படுவது போன்று, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலம் எமது கடல் வளத்தினை கணிசமானளவு அதிகரித்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தலைமையிலான அணியினருக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் கடற்படையினயருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)