செய்திகள்

வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஈரோஸ் தனித்து போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), கலப்பை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.

‘எவருக்கும் அடிபணிந்து நடப்பது எமது நோக்கமல்ல. மக்களின் சுதந்திரத்துக்காகவே எமது அரசியல் பயணம் அமையும். தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் அதற்கு எமது கட்சி ஆதரவு வழங்கும்’ என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன், தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறினார்.

‘தமிழ் மக்களுக்கு நல்லதொரு தலைமைத்துவதத்தையும் நல்ல சமூகத்தையும் உருவாக்க வேண்டும். மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமாயின், ஈரோஸ் கட்சிக்கு அரசியல் அங்கிகாரம் வேண்டும். அந்த அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகங்களில்  தமது கட்சி போட்டியிடப்போகிறது’ எனவும் அவர் கூறினார்.