செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மூன்று புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மூன்று புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராகக் கடமையாற்றும் கீதநாத் காசிலிங்கத்துக்கு இப்பதவி மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக சுகததாச கொங்கல லியனகே, யசரங்க கொடவெல மற்றும் கீதநாத் காசிலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.(15)