செய்திகள்

வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கல்வி வலயங்களில் காணப்படும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சேவை 1,2-1 ஆகிய தரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக் கல்வி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவங்களை வலயக் கல்விப் பணிப்பாளரூடாக எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்.நகர் நிருபர்-