செய்திகள்

வடக்கு முதல்வருடன் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பேச்சு

வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடியுள்ளார்.

வடபகுதி நிலை, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வடமாகாண சபைக்கான தேவைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று பகல் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது.

வடமாகாண ஆளுநர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரையும் உயர் ஸ்தானிகர் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.