செய்திகள்

வடமராட்சி முள்ளி பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிப் பிரயோகம்- இருவர் படுகாயம்

வடமராட்சி முள்ளி பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.(15)