செய்திகள்

வடமாகாண சபையின் தீர்மானம் மாகாண சபைக்கு உட்பட்டதல்ல: நிமால் கண்டனம்

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட கருத்து மாகாண சபைக்கு உட்பட்ட விடயமல்ல என எதிர்க்கட்சித் தலைவர்  நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.