செய்திகள்

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் இணைத்துக்கொள்வதற்காக கல்வி வலய மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இதேவேளை வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.(15)