செய்திகள்

வத்தளை கொரோனா தடுப்பூசி மையத்தில் இன்று காலை பதற்றமான நிலைமை

வத்தளையில் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்து பதற்றமான நிலை இன்று காலை உருவானது.நேற்று வத்தளை ஹெந்தல வீதியில் அமைந்துள்ள கெரவளப்பிட்டிய மருத்துவ சுகாதார அதிகாரியின் அலுவலகத்தில் நேற்று அப்பகுதி மக்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.இன்றும் அந்த பகுதி மக்களிற்கு தடுப்பூசி வழங்கப்படும் என பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.இதன் காரணமாக இ;ன்று காலையிலேயே சென்ற பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.எனினும் இன்று காலை 9 மணிக்கு அப்பகுதிக்கு வந்த சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் அந்த பகுதியில் தடுப்பூசி வழங்கப்படுவது இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு நேற்றைய தினம் வத்தளையில் – ஹெந்தல வீதியில் அமைந்துள்ள கெரவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டது. தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினமும் தொடரும் என பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக பலர் இன்று அந்த இடத்திற்கு வந்து அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். எனினும், சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் காலை 9 மணியளவில் அந்த இடத்திற்கு வந்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.இது தொடர்பிலான அறிவித்தல் பலகை வெளியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவுறுத்தினர். எனினும் அத்தகைய அறிவித்தல் எதுவும் காணப்படவில்லை என பொதுமக்கள் கூறினர். இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.எனினும் குறிப்பிட்ட பகுதி மக்களிற்கு குறிப்பிட்ட தினத்திலேயே தடுப்பூசிவழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக சில தாதிமார்கள் தெரிவித்துள்ளனர்.(15)