செய்திகள்

வலி.தெற்குப் பிரதேசத்திலுள்ள 30 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வீதிகளுக்கு மின் விளக்குகள்

வலி.தெற்குப் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் 30 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வீதிகளுக்கு மின்விளக்குப் பொருத்தும் செயற்பாடு நிறைவடைந்துள்ளது.

அந்தந்தப் பிரதேச சனசமூக நிலையங்களுடன் இணைந்து பிரதேச சபை உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையில் குறித்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு தம்பிப் பிள்ளை மணியகார வீதி,புன்னாலைக்கட்டுவன் வடக்குத் திடற்புலம் வீதி, ஈவினை ஜே.209 கிராம சேவகர் பிரிவில் ஈவினை மத்தாளோடை,ஈவினை மத்தி கருமாரியம்மன் கோயில் வீதி,ஈவினை கிழக்கு,ஈவினைப் பிள்ளையார் வீதி,ஈவினை கலையரசி சனசமூக நிலைய வீதி ஆகிய வீதிகள் மின்னொளி பெற்றுள்ளன.வலி.தெற்குப் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் இ.அரிகரனின் முன்மொழிவின் அடிப்படையில் இந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின் விளக்குப் பொருத்தப்பட்டதன் காரணமாகப் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சமின்றிப் பயணிக்க முடிவதாகத் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் நிருபர்-

IMG_2413