செய்திகள்

வல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது

பருத்தித்துறை துன்னாலை வல்லியானந்த விளையாட்டு கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் அமரர் பார்த்தீபன் மற்றும் அமரர் கேசிகன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி 5 அணிகளுக்கு இடையிலான மாபெரும் சுற்றுப்போட்டி நேற்று கழக மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இறுதி போட்டி நேற்று பிற்பகல் 3மணியளவில் கழக தலைவர் ஜெயரமணன் தலைமையில் சிறப்பு விருந்தினர் வருகையுடன் விமர்சையாக ஆரம்பமாகி இறுதி போட்டியில் வல்லியானந்தம் நண்பர்கள் அணி வல்லியானந்தம் பாய்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இந்நிலையில் இறுதி போட்டியில் வல்லியானந்தம் நண்பர்கள் அணி வல்லியானந்தம் பாய்ஸ் அணியை வீழ்த்தி இந்த வருடத்துக்கான வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து.