செய்திகள்

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.வடமாகாணத்தில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமான வவுனியாவிற்கு அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை தாருங்கள் என என்னால் கேட்கப்பட்டது.இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி 26ம் திகதி எமது நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை தருவதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.(15)