செய்திகள்

வவுனியாவில் இன்று அதிகாலை அதிக பனி மூட்டம் – பாடசாலை மாணவர்கள் பெரும் அவதி

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் வாகன சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.அத்துடன் ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளி விளக்குகளை பயன்படுத்தியிருந்தன.இதேவேளை வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவில் பனி மூட்டம் காணப்பட்டுள்ளது.(15)