செய்திகள்

வவுனியாவில் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்க அளவீடு ஆரம்பம்

வவுனியா, பேயாடிகூழாங்குளத்தில் இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவுக்கு காணி சுவீகரிக்க அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. தனியார் 12 பேருக்குச் சொந்தமான காணியும் பாடசாலை ஒன்றினுடைய காணியும் உள்ளடங்கலாக 30 ஏக்கர் காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

நேற்றைய தினம் காணி உரிமையாளர்களை அப்பகுதிக்கு வருகை தந்து, காணிகளை அடையாளம் காட்டுமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூவர் மாத்திரமே அங்கு சென்றிருந்தனர். எனினும் நில அளவீடு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் தற்போது 56 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.