செய்திகள்

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்

சர்வதேச தந்தையர் தினத்தை நேற்று (19.06) வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் தமிழ் விருட்சமும், கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து சிறப்பாக செய்தது.

தந்தையர்கள் தமது மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

பணிஸ் உண்ணும் போட்டி, பலூன் உடைத்தல், மூன்று கால் ஓட்டம், ஊசி நூல் கோர்த்தல், யானை நடை, சோடா குடித்தல் உட்பட பல நிகழ்வுகள் நடைபெற்று பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கபட்டன .

பாடசாலை அதிபர்கள், அதிகாரிகள், அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், வர்த்தகர்கள் உட்பட பலர் தமது பதவிகளை விடுத்து தந்தையர்களாக பிள்ளைகளுடன், பிள்ளைகளாக விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்வின் சிறப்பு அம்சமாக புளியங்குளம் இந்து கல்லூரியில் கற்க்கும் மாணவி தட்சிகாவுக்கு வன்னி பட்டறை மூலம் துவிசக்கர வண்டியும் கலந்து கொண்ட பெற்றோர்களில் மூவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யபட்டு தேசபந்து இ.கௌதமன் அவர்களின் அனுசரணையில் மூன்று பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் வழங்கி வைக்க பட்டன.

இந்நிகழ்வுக்கு வன்னி பட்டறை பிரதான அனுசரணையும், தேசபந்து இ.கௌதமன் அனுசரணையும், சுரேந்திரன் நற்பணி மன்றம், சதீஸ் (பிரான்ஸ்), கஜன் புக் சென்டர், ஜெயா பாம், ராம் சிவா (கனடா) சாஸ்திரி கூளாங்குளம் அமரர் செ.பத்மநாதன் குடும்பம் ஆகியோர் இணை அனுசரணை வழங்கி இருந்தனர்.

DSCN7107 DSCN7114 DSCN7134 DSCN7169

N5