செய்திகள்

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர்ப்பவனி

புதுவருட தினமாகிய இன்று வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

IMG_2243கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவத்தின் எட்டாம் நாளாகிய இன்று தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

IMG_2223காலை இடம்பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஆதிவிநாயகப் பெருமான் திருத் தேரிலே எழுந்தருளி பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் புடை சூழ பவனி வந்தார். அடியவர்கள் புதுவருட தினத்தில் விநாயகப் பெருமானை தரிசித்து ஆசிகளைப் பெற்றதுடன் தமது நிவர்த்திக் கடன்களை நிறைவேற்றும் முகமாக கற்பூரச்சட்டி, பிரதிஸ்டை என்பவற்றையும் மேற்கொண்டனர்.

ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கபட்டு அடியவர்கள் ஆதிவிநாயகப் பெருமானை தரிசித்தார்கள்.

IMG_2169

N5