செய்திகள்

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பஹாவை சேர்ந்த 20பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகல்வியற் கல்லூரி கொரொனா தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.இந்நிலையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், கம்பஹாவை சேர்ந்த 20பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.இவ்வாறு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர்.பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் 194 பேருக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதன்படி 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)