செய்திகள்

வாட்ஸ்அப்பில் வேகமாக பரவிவரும் பொலிஸ் உதவி கமிஷனர் பெண் பொலிஸ் ஒருவருக்கு அனுப்பிய செய்தி

சென்னையில் போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீஸ் ஒருவரை, தனது வலையில் வீழ்த்த செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசாரிடையே வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட செல்போன் பேச்சு அதிவேகமாக பரவி வருகிறது. அது பற்றி விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பணியாற்றும் பெண்காவலரை தனது வலையில் வீழ்த்த கிளுகிளுப்புடன் உதவி கமிஷனர் பேசும் வசனங்கள் வாட்ஸ்அப் ஆடியோவில் உள்ளது. இடையிடையே போலீஸ் வயர்லெஸ் சவுண்டுடன் பேசப்படும் அந்த ஆடியோ வாய்சில் உதவி கமிஷனர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த பெண்காவலரை தேடி பிடித்து நம்பரை வாங்கி பேசுவதாக கூறுகிறார். ஆரம்பத்திலேயே பெண் காவலரை செல்லம் என்று கொஞ்சியபடி பேசுகிறார். நேற்று 2, 3 முறை கூப்பிட்டேன். ஏன் கட் பண்ணிட்டே. பக்கத்தில் ஆட்கள் இருந்தார்களா. அதனால்தான் கட் பண்ணிட்டியா, ஏன்டா என்னை இப்படி என்னை நீ கஷ்டப்படுத்துகிறாய் பேபிமா என்று உதவி கமிஷனர் கொஞ்சுகிறார்.

உன்னை பார்த்து எத்தனை நாள் ஆகிவிட்டது. 2, 3 மாதமாக உன்னை கண்டே பிடிக்க முடியவில்லை. உன் நம்பரை பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. பெண் கழுதைங்க (பெண்கள்) நம்பர் எல்லாம் இருக்கிறது. ஆனா உன் நம்பர் மட்டும் இல்லை செல்லம் என்கிறார் உதவி கமிஷனர்.

பின்னர், குழந்தை மற்றும் கணவன் பற்றி விசாரிக்கும் அவர், உன் வீட்டுக்காரர் என்னை விட அழகாக இருப்பாரா என்று கேட்கிறார். ஆமாம் என்று சொன்னவுடன் வாட்ஸ் அப்பில் வீட்டுக்காரர் படத்தை அனுப்பும் படி சொல்லுகிறார், அத்துடன் உன்னுடைய அழகான படத்தையும் அனுப்பு. என்னிடம் இருப்பது ஸ்மார்ட்போன். அதில் உன் அழகான முகத்தை பார்ப்பேன் என்று கொஞ்சுகிறார். பின்னர், எந்த ஊர் என்று பெண் காவலரிடம் கேட்கும் உதவி கமிஷனர், அவருக்கு ராஜபாளையம் என்றவுடன், தனியாவா செல்கிறாய், நானும் உன்னுடன் வரட்டுமா என்று கொஞ்சுகிறார். என்னை உதவி கமிஷனர் என்று நினைத்து சார் என்று கூப்பிடாதே. நான் உனக்கு பாய்பிரண்ட்தான். அப்படி நினைத்தபடிதான் பேச வேண்டும்.

அதிகாரி என்று நினைக்காதே. எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறியவர், ஒருநாள் என்னுடன் தனியாக வருகிறாயா என்று கேட்கிறார். பிறகு அந்த பெண் போலீசின் அழகை வர்ணித்து விட்டு, நீ டைட்டாக உடைய அணிய வேண்டாம். கண்ட பயலுகளும் பார்ப்பார்கள். சுடிதாரில் நீ ரொம்ப சூப்பரா இருக்கிறாய். சேலையில் இன்னும் சூப்பராக இருப்பாய் என்று வர்ணிக்கிறார். பின்னர் அடிக்கடி தன்னிடம் போன் பேச வேண்டும் என்று கூறி தனது வாட்ஸ் அப் நம்பரையும் கூறுகிறார். வாட்ஸ்அப் நம்பரை பார்த்தபோது, அது வடசென்னையில் உள்ள உதவி கமிஷனரின் எண் என்பதும், அவர்தான் பெண் காவலரிடம் கொஞ்சியபடி கிளுகிளுப்பாக பேசியதும் தெரியவந்தது. இப்போது, உதவி கமிஷனரிடம் வாட்ஸ் அப் பேச்சுதான் போலீசாரிடையே பரபரப்பாக பரவி வருகிறது.